உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்

மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்

குன்றத்துார் : குன்றத்துார், ஆகாஷ் நகரை சேர்ந்த ஸ்ருதி, 26, என்பவருக்கும், வேலுார் மாவட்டம் குடியாத்தம்பகுதியை சேர்ந்த வெங்க டேசன், 29, என்பவருக்கும்,நேற்று முன்தினம் குடியாத்தத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், குன்றத்துார், கோவூர் பகுதிகளை சேர்ந்தபெண்ணின் உறவினர்கள்பங்கேற்றனர். பின்,தனியார் 'டிராவல்ஸ்' நிறுவன மினி பேருந்தில், 50 பேர் குன்றத்துார் திரும்பிவந்தனர்.பேருந்தை வினோத், 40, ஓட்டிச் சென்றார். ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார்செல்லும் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியை, நள்ளிரவு 12:30 மணிக்கு பேருந்து கடந்த போது, சாலையின் குறுக்கேதுவங்கும் மையத்தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில், பேருந்தின்முன்பகுதி சேதமடைந்தது. பேருந்தில் பயணித்த 9 பெண்கள், ஒரு ஆண் என, 10 பேர் காயமடைந்தனர்.இவர்களை, குன்றத்துார்போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

எச்சரிக்கை பலகை அவசியம்

நெடுஞ்சாலையில், பல இடங்களில் மையத்தடுப்பு துவங்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்கப்படுவதில்லை.இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், சாலையின் குறுக்கே திடீரென துவங்கும் மையத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன.எனவே, நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு துவங்கும் இடங்களில், அறிவிப்பு பலகை, ஒளிர் பட்டைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை