உத்திரமேரூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலிப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சியில், 2024 -- 25ம் ஆண்டிற்கான சொத்து வரி, திடக்கழிவு சேவை கட்டணம், தண்ணீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகிய அனைத்தும் 100 சதவீதம் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:உத்திரமேரூரில், 2024- - 25ம் ஆண்டிற்கான வரி வசூலை, வரித்தண்டலர், இளநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இணைந்து 100 சதவீதம் எட்ட ஒத்துழைப்பு கொடுத்தனர்.மேலும், வரும் காலங்களில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், உத்திரமேரூர் பேரூராட்சியில் முழுமையாக செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.