உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 1.21 லட்சம் பேர் ரயிலில் ஓசி ரூ.6.25 கோடி அபராதம்

1.21 லட்சம் பேர் ரயிலில் ஓசி ரூ.6.25 கோடி அபராதம்

சென்னை, சென்னை ரயில் கோட்டத்தில், கடந்த மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.21 லட்சம் பேரிடமிருந்து, 6.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 30ம் தேதி சிறப்பு டிக்கெட் சோதனையின் போது, உரிய டிக்கெட் இன்றி பயணித்த, 3,254 பேரிடம், 18.22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. டிக்கெட் இன்றி பயணித்த ஒரு லட்சத்து, 21,189 பேரிடம் இருந்து, 6.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை