உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவ முகாம் 143 பேருக்கு பரிசோதனை

மருத்துவ முகாம் 143 பேருக்கு பரிசோதனை

காஞ்சிபுரம் : சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, காஞ்சிபுரம் சி.வி.எம்., அண்ணாமலை அறக்கட்டளை, காஞ்சிபுரம் லைப்கேர் மருத்துவமனை, குமார் கண் மருத்துவமனை, இந்திய பல் மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் லைப்கேர் மருத்துவமனையின் இயக்குனர் தி.அன்புச்செல்வன், பல்லவன் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையின் இதயவியல் பேராசிரியர் எஸ்.நாகேந்திர பூபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் இதயநோய் பரிசோதனை மேற்கொண்டனர்.கண் மருத்துவர் கார்த்திகேயன், பல் மருத்துவர் கணேஷ் தலைமையில் கண், பல் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 143 பேர் பங்கேற்றனர். முன்னதாக ரோட்டரி சங்க தலைவர் எஸ்.பிரகாஷ் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை