உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கண் மருத்துவ முகாம்: 150 பேர் பங்கேற்பு

 கண் மருத்துவ முகாம்: 150 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமில் 150 பேர் பங்கேற்றனர். பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், சின்ன காஞ்சிபுரம் லயன்ஸ் சங்கம், உதயம் லயன்ஸ் சங்கம், லியோ சங்கம், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் அன்னி பெசன்ட் மழலையர் தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 150 பேர் பங்கேற்றனர். ராமச்சந்திரா மருத்துவமனை கண் மருத்துவ நிபுணர்கள் கண் பரிசோதனை செய்து நோயின் தன்மைகேற்ப மருந்து, மாத்திரை வழங்கினர். இதில், 10 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். 53 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை