உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன், 50,000 ஆட்டை

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன், 50,000 ஆட்டை

ஸ்ரீபெரும்பதுார்:சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் அடுத்த செல்லம்பட்டறை கிராமத்தை;r சேர்ந்தவர் மரியசத்தியா, 55. இவரது மனைவி குழந்தைதெரேசா, 50. இவர், குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதுார் அருகே நெமிலியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.இவரது வீட்டின் அருகே, குழந்தைதெரேசாவின் தங்கை தீபா, 48, சொந்தமான வீடு உள்ளது. தீபா, கணவர் மற்றும் குழந்தைகளுடன் அம்பத்துாரில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.அவ்வப்போது, இருவரும் சொந்த வீட்டிற்கு சென்று வந்தனர். இந்நிலையில், மரியசத்தியாவின் வீட்டு வாசலில் நிறுத்தபட்டிருந்த காரை எடுக்க, அதே பகுதியில் வசிக்கும் குழந்தை தெரேசாவின் மற்றொரு அக்கா மகன் நேவின்குமார், 28, நேற்று மதியம் மரியசத்தியா வீட்டிற்கு சென்றார்.அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, 12 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.அதேபோல், அருகில் இருந்த தீபாவின் வீட்டிலும், 4 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !