உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதி 2 கன்றுகள் பலி

வாகனம் மோதி 2 கன்றுகள் பலி

ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் இரவு சாலை நடுவே கூட்டமாக படுத்திருந்த மாடுகளின் மீது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு கன்றுகள் பலியாயின.மாட்டின் உரிமையாளர்கள் யாரும் உரிமை கோரி வராததால், செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வருவாய் ஆய்வாளர் அலுலகம் எதிரே, பலியான கன்றுகள் போடப்பட்டுள்ளன. சாலையில் நடுவே படுத்து உறங்கும் மாடுகளை பிடிக்க , மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ