உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி

 பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், இரு வாலிபர்கள் பலியா கினர். காஞ்சிபுரம் மாவட்டம், கொட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம், 24. இவர், கீழம்பி கிராமத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, வேலையை முடித்து, தன் 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், பெரிய கரும்பூர் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த மோகன், 30, என்பவர், மீனா, 30, மற்றும் சந்தியா, 23, ஆகிய இரு பெண்களுடன், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார். இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், சந்தானம், மோகன் ஆகிய இரு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். காயமடைந்த மீனா மற்றும் சந்தியா ஆகிய இருவரையும், பொன்னேரிக்கரை போலீசார் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை