உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லம் மருத்துவ முகாமில் 200 பேருக்கு ஆலோசனை

வல்லம் மருத்துவ முகாமில் 200 பேருக்கு ஆலோசனை

ஸ்ரீபெரும்புதுார்:வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற, ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார்' என்ற சிறப்பு முகாமில், பெண்கள், குழந்தைகள் உட்பட 200 பேருக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார்' என்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில், குழந்தைகளுக்கான தடுப்பூசி, பெண்களுக்கான ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனைகள், கர்ப்பிணியருக்கான பரிசோதனை, காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், கண் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு பங்கேற்று, ஆண், பெண், குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். முகாமில், வல்லம், வல்லக்கோட்டை, போந்துார், பால்நல்லுார், மாத்துார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை