மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
3 minutes ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
5 minutes ago
ஓரிக்கையில் சேதமான சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு
7 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 2,072 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40,656 படித்த இளைஞர்கள் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டிற்கு இரண்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டுக்கான இரண்டாவது பெரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நேற்று நடந்தது. 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இம்முகாமில், 2,072 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 408 ஆண்களும், 125 பெண்களும் என 533 பேர்களுக்கு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் 202 ஆண்களும், 63 பெண்கள் என மொத்தம் 265 பேர், முதல் சுற்றில் தேர்வாகி, இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தவர்களுக்கு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
3 minutes ago
5 minutes ago
7 minutes ago