உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 212 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

காஞ்சியில் 212 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 212 விநாயகர் சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 359 இடங்களில் விநாயகர் சிலை வைக்க பல்வேறு நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கி இருந்தது. விநாயகர் சதுர்த்தியான, 27ம் தேதி, 18 சிலைகளும், 28ம் தேதி 15 சிலைகளும், மூன்றாம் நாளான கடந்த 29ம் தேதி 100 சிலைகளும், நேற்று முன்தினம் 14 சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஐந்தாம் நாளான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீதம் இருந்த 212 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரி, ஒ.பி., குளம், திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளம் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதில், காஞ்சி மாவட்டம் மற்றும் நகர ஹிந்து முன்னணி சார்பில், 35ம் ஆண்டு விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பகுதியில் இருந்து புறப்பட்டது. காந்தி சாலை, காமராஜர் வீதி, காஞ்சிபுரம் சங்கரமடம் வழியாக நான்கு ராஜ வீதி வழியாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று அங்கு 20 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி