உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு

 வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில், 24,864 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும், வாக்காளர் வரைவு பட்டியல், கடந்த 19ல் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 2.74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, 11.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 1ம் தேதியை, தகுதி நாளாக கருத்தில் கொண்டு, வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகியவைக்கு டிச., 27, 28ல் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் சென்று விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்,1,545 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தன. வாக்காளர்கள் பலரும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த ஓட்டுச்சாவடியில் வழங்கினர். அதன்படி, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும், படிவம் -6ல் 19,051 விண்ணப்பங்கள். படிவம்- 7ல் 133 விண்ணப்பங்கள்; படிவம் -8ல் 5,680 விண்ணப்பங்கள் என, மொத்தம் 24,864 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை