மேலும் செய்திகள்
செங்கை அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா
26-Oct-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லுாரியில், 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பல்லவன் கல்வி குழுமத்தின் அங்கமான காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லுாரியில், 25வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கல்லுாரி நிறுவனரும் தாளாளருமான பி.போஸ் தலைமை வகித்தார். புதுடில்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு தலைவரின், ஒழுங்குமுறை பிரிவு ஆலோசகர் பேராசிரியர் மோரி ராமுலு பங்கேற்று, பல்லவன் பொறியியல் கல்லுாரியில் 7 பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 527 மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில், பல்லவன் பொறியியல் கல்லுாரி நிர்வாக இயக்குநர் ஜெயபெருமாள் போஸ், இயக்குநர்கள் ஜானகி புருஷோத்தமன், கன்னிகா பரமேஸ்வரி போஸ், எத்திராஜ் கோவிந்தராஜ், கிருஷ்ணன், மஞ்சுளா சிவ சண்முகம், கல்லுாரி முதல்வர் பால்வண்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Oct-2025