உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்லுாரி கனவு நிகழ்ச்சி 2,953 மாணவர்கள் பங்கேற்பு

கல்லுாரி கனவு நிகழ்ச்சி 2,953 மாணவர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் மீனாட்சிமருத்துவக் கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர் கல்வி பெற வழிகாட்டும், கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நுால் அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லுாரி கனவு' கையேடு புத்தகத்தை வெளியிட மாணவி ஒருவர் பெற்றுக் கொண்டார். இதில், 2,953 மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர்,காஞ்சிபுரம் எழிலரசன் மற்றும் முதன்மைகல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை