உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 339 வழக்குகள் தீர்வு ரூ.10 கோடிக்கு தீர்வு

339 வழக்குகள் தீர்வு ரூ.10 கோடிக்கு தீர்வு

காஞ்சிபுரம்:தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழு உத்தரவுப்படி, மாதந்தோறும் மக்கள் நீதிமன்றம் காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான மக்கள் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று துவக்கி வைத்தார்.முதன்மை சார்பு நீதிபதி அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, நீதித்துறை நடுவர் வாசுதேவன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலரும் மக்கள் நீதிமன்றத்தில் நேற்று பங்கேற்றனர்.இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, குடும்ப நல வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, தொழிலாளர் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2,290 வழக்குகளில், 339 வழக்குகள் தீர்வு வழங்கப்பட்டு, இழப்பீடு தொகையாக, 10.4 கோடி ரூபாய் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை