கச்சபேஸ்வரர் கோவிலில் 3 நாள் தெப்போத்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவ., 19ம் தேதி முதல், 21ம் தேதி வரையில், மூன்று நாட்கள் தெப்போத்சவம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்துடன், திருக்கோவில் திருக்குள தெப்போத்சவ டிரஸ்ட் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மரபினர் செய்து உள்ளனர். கடந்த, 56 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக நடக்கும் தெப்போத்சவம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.