உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 197 அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,309 பேர் விண்ணப்பிப்பு

197 அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,309 பேர் விண்ணப்பிப்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்திட்டத்தின்கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் எனப்படும் குழந்தைகள் மையங்கள் உள்ளன.இவற்றில் காலியாக உள்ள, 107 அங்கன்வாடி பணியாளர், 11 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என, 197 இடங்களுக்கு நேரடியாக நியமனங்கள் செய்யப்பட உள்ளன.மாவட்டத்தில் வட்டார வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும்இனசுழற்சி முறையிலும் தேர்வு செய்யப்படஇருப்பதாக, ஏப்ரல் மாதம் துவக்கத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.விண்ணப்பங்களை www.icds.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும், இப்பணிகளுக்கு ஏப்ரல் 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோஅல்லது அந்த கிராம ஊராட்சிக்குட்பட்டபிற கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராக விண்ணப்பதாரர் இருத்தல்வேண்டும் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இருப்பினும், ஏராளமான பெண்கள் இப்பணிகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், அங்கன்வாடி பணியிடங்களுக்கு 2,587 பேரும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 136, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 586 என, மொத்தம் 3,309 பேர், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ