உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  400 கிலோ குட்கா பறிமுதல்

 400 கிலோ குட்கா பறிமுதல்

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம், நேதாஜி நகர் பகுதியில், ஒருவர் தனி வீடு வாடகைக்கு எடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி, பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்வதாக, பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி, போலீசார் அந்த வீட்டிற்கு சென்று, வீட்டு உரிமையாளரின் முன்னிலையில்பூட்டை உடைத்து சோதனை செய்ததில், அங்கு குட்கா புகையிலை பொருட் கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த, 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி விற்ற, ரஹமத்துல்லாஹ், 4 5, மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து , நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை