உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல் போன் தொழிற்சாலையில் திருடிய 5 ஊழியர்கள் கைது

மொபைல் போன் தொழிற்சாலையில் திருடிய 5 ஊழியர்கள் கைது

ஸ்ரீபெரும்புதுார் ஒரகடத்தில் உள்ள மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலையில், புதிய மொபைல் போன்களை திருடி, உபயோகித்து வந்த ஐந்து ஊழியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் பி.ஒய்.டி., எனும் மொபைல் போன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், தொழிற்சாலையில் இருந்து, புதிய மொபைல் போன்களை திருடி, உபயோகித்து வருவதாக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதன் படி, தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்திய சோதனையில், ஊழியர்கள் ஐந்து பேர், தொழிற்சாலையில் இருந்து புதிய ரக மொபைல் போன்களை திருடி உபயோகித்து வந்தது தெரிந்தது. இது குறித்து, தொழிற்சாலை தரப்பில், ஒரகடம் போலீசில் புகார் அளித்ததின்படி, மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 22, ரோஷன்குமார், 23, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார், 22, விக்ரம்குமார், 47, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் ஓரான், 28, ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை