குறைந்த மின்னழுத்த பிரச்னை 50 குடும்பங்கள் அவதி
உத்திரமேரூர் :உத்திரமேரூர் பேரூராட்சியில் நியூ விஐபி நகர் உள்ளது. இங்கு, 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்கம்பங்கள் நடப்பட்டு, அதன் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், நியூ விஐபி நகரில், ஒரு மாதமாக குறைந்த மின்னழுத்த மின்சார வினியோகம் இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.குறைந்த மின்னழுத்தத்தால் குடியிருப்புகளில் உள்ள மின் விளக்குகள், மின்விசிறி, 'டிவி., பிரிட்ஜ், வாஷிங்மிஷின்' ஆகியவை இயங்கவில்லை.எனவே, நியூ விஐபி நகரில் குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் மின்தடையை சரி செய்ய, மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.