உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

பெண் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 35. இவரது மனைவி ஷகிலா, 29. தம்பதிக்கு சேகுவார், 3, என்ற ஆண் குழந்தை.ஜெயகுமார் குடும்பத்துடன், பூந்தமல்லி அருகே, திருமழிசையில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள ஜெயகுமாரின் உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, திருக்கழுக்குன்றம் புறப்பட்ட ஷகிலா, குழந்தையுடன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் வந்தார்.பின், அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் அரசு பேருந்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்த ஷகிலா, கைப்பையில் வைத்திருந்த 6 சவரன் தங்க நகை காணாமல் போனதை கண்டார்.இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் ஷகிலா புகார் அளிததார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ