மேலும் செய்திகள்
செங்கையில் 36 ஏரிகள் நிரம்பின
28-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதிக்குள் கனமழை காரணமாக நிரம்பிவிடும். ஆனால், நடப்பாண்டில் அக்டோபர் மற்றும் நவம்பரில் போதிய மழை இல்லாததால், ஏரிகள் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டது.சில நாட்கள் முன்பாக பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக, 20 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. ஆனால், 100 க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீர் மட்டம், 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன.ஏரிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு பிடியில் இருப்பதால், பல ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் நீடிக்கிறது. குன்றத்துார் அருகே உள்ள அணைக்கட்டு தாங்கல் எனும் ஏரி முழுதும் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், 133 ஏக்கரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் இந்த ஏரி என்றைக்குமே நிரம்புவதில்லை. மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், மணிமங்கலம் ஏரி, தாமல், தென்னேரி, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய ஏரிகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.நீர்வள ஆதாரத்துறையினர் நேற்று எடுத்த கணக்கெடுப்பின்படி, 71 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகளில், 81 ஏரிகள் 75 சதவீதமும், 118 ஏரிகள் 50 சதவீதமும், 110 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.
28-Nov-2024