உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காலை 7:47 மணி ரயில் ரத்து தாம்பரம் - செங்கை பயணியர் அவதி

காலை 7:47 மணி ரயில் ரத்து தாம்பரம் - செங்கை பயணியர் அவதி

சென்னை: சென்னை கடற்கரை -- தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். பயணியர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணியர் நலனை கருத்தில் வைத்து, தாம்பரம் - செங்கல்பட்டிற்கு நெரிசல் மிக்க நேரங்களில், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தினமும் காலை 7:10, 7:20, 7:35, 7:47, 8:00 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், காலை 7:47 மணி ரயில் திடீரென எவ்வித அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறுகையில், 'தாம்பரம் - செங்கல்பட்டு தட சாலை போக்குவரத்து அதிகரித்து வருவதால், பெரும்பாலானோர் கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில், காலை 7:47 மணி ரயில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணியரின் கோரிக்கையை ரயில்வே அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்' என்றனர்.சென்னை ரயில் கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'பயணியரின் புகார் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி