மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு
04-Sep-2024
குன்றத்துார்:மாங்காடு அருகே பெரிய கொளுத்துவாஞ்சேரி, அபிராமி நகரை சேர்ந்தவர் நிக்கில் ஜான்,55. இவரது தங்கை திருமணத்திற்கு புதிய நகைகளை செய்ய வீட்டில் இருந்த 39 சவரன் நகையில், 30 சவரனை நகைகளை எடுத்துக்கொண்டு, கேரளமா மாநிலம், திருவனந்தபுரத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் வைக்கப்பட்டிருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகைகளை உருக்கி புதிய நகை செய்ய எடுத்து சென்றதால், கொள்ளையர்களிடம் இருந்து அவை தப்பின.
04-Sep-2024