மேலும் செய்திகள்
சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழப்பு
26-Jan-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 30; திருமணமாகாதவர். இவர், கடந்த 30ம் தேதி காலை 10:00 மணிக்கு தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது, உழவு மாடு ஒன்றின் கழுத்தில் தொங்கிய கயிறை அகற்ற வெங்கடேசன் முயன்றார். அப்போது மாடு முட்டியதில், படுகாயம் அடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Jan-2025