உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டிற்கு வரும் முன் சேதமான மயான எரிமேடை

பயன்பாட்டிற்கு வரும் முன் சேதமான மயான எரிமேடை

ஸ்ரீபெரும்புதுார்:மயான எரிமேடை, பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது அப்பகுதி மக்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.இங்கு, 2024-- -25 நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 14.23 லட்சம் ரூபாய் செலவில், புதியதாக மயான எரிமேடை, சுற்றுச்சுவர், போர்வெல் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில், தற்போது மயான எரிமேடையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, உடைந்து சேதமடைந்து உள்ளது. புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன்னரே சேதமடைந்த எரிமேடையால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை