உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த கும்பல்; வகுப்பறையை அடித்து உடைத்து நாசம்

நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த கும்பல்; வகுப்பறையை அடித்து உடைத்து நாசம்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் அரசு உதவிபெறும் ஏ.கே.டி., உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர்.விடுமுறை நாட்களில் பள்ளி சுற்றுசுவர் வழியாக அத்துமீறி உள்ளே நுழையும் மர்ம நபர்கள், மது அருந்துவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால், இரவில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில், மின் விளக்கு, மின்விசிறி, மேஜை, நாற்காலி, கடிகாரம் என, வகுப்பறை பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்துஉள்ளனர்.பள்ளி ஆசிரியர்கள் வழக்கம்போல், பணிக்கு நேற்று காலை வந்தபோது, வகுப்பறையில் உடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி