உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / களியப்பேட்டையில் புதிய குடிநீர் தொட்டி

களியப்பேட்டையில் புதிய குடிநீர் தொட்டி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை கிராமத்தினரின் குடிநீர் தேவைக்கு, அப்பகுதி பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனிடையே, அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்ட கோரிக்கை எழுந்தது.அதன்படி, அப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நபார்டு வங்கி நிதியின்கீழ், 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான கட்டுமான பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை