உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இ - சேவை மைய சுவரில் வளர்ந்துள்ள செடியால் உறுதிதன்மை கேள்விக்குறி

இ - சேவை மைய சுவரில் வளர்ந்துள்ள செடியால் உறுதிதன்மை கேள்விக்குறி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, அரசு இ- - சேவை மைய கட்டடத்தின் மீது வளர்ந்துள்ள, அரச செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகம் வளாகத்தில், அரசு இ - -சேவை மையம் செயல்பட்டு வருகிறது. ஜாதி, வருமானம், இருப்பிடம், ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்க்கை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் என, வருவாய் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கு, நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்த இ- - சேவை மைய கட்டடம் பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் கூரை மற்றும் பக்கவாட்டு சுவரில் அரச செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், கான்கிரீட் சுவரில் அரச செடியின் வேர்கள் படர்ந்து, கட்டடம் உறுதிதன்மை இழந்து, சேதமாகும் நிலை உள்ளது.எனவே, அரசு இ- - சேவை மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ