மேலும் செய்திகள்
இன்று இனிதாக காஞ்சிபுரம்
1 hour(s) ago
வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு
2 hour(s) ago
காஞ்சிபுரம்:சென்னையில் இருந்து, தங்க நாற்கர சாலை வழியாக பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டோ வழியாக, பெங்களூருக்கு செல்வதற்கு, 2022ல் அதிவிரைவு சாலை போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கொட்டவாக்கம், மேல்பொடவூர் ஆகிய கிராம ஏரி மண்ணை டிப்பர் லாரிகளில் ஏற்றி வந்து, அதிவிரைவு சாலை உயரமாக போடும் பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, மண்ணை அள்ளிச் சென்ற டிப்பர் லாரி, மணியாட்சி கிராமம் அருகே, கொட்டிவிட்டு செல்லும் போது, ஆரியபெரும்பாக்கம் மின் பகிர்மான நிலையத்தில் - பள்ளூர் துணை மின் நிலையத்திற்கு செல்லும் அதிக வோல்ட் மின் சப்ளை உடைய மின் கம்பியில் சிக்கிக் கொண்டது. அதிர்ஷ்டவசமாக, லேசான காயங்களுடன் டிரைவர் உயிர் தப்பினார்.இருப்பினும், நேற்று, மோசூர் மின் பகிர்மான அதிகாரிகள், மணியாட்சி கிராமம் அருகே, ஆய்வு செய்து லாரியில் சிக்கிய மின் கம்பியை லாவகமாக அகற்றினர். அதன்பின், மின் சப்ளை வழங்கப்பட்டது.
1 hour(s) ago
2 hour(s) ago