குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின்கீழ், உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள 73 ஊராட்சிகளில், 186 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, 6 வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி கற்பித்தல், கர்ப்பிணியர் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிக்க, ஆதார் சேவை மையம் நேற்று துவக்கப்பட்டது.இந்த ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறுமாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.