சாலையோரம் சாய்ந்துள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, தத்தனுார் வழியாக, வளத்தாஞ்சேரி -- பேரிஞ்சாம்பாக்கம் செல்லும் பிராதன சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.வளத்தாஞ்சேரி, குண்டுபெரும்பேடு, தத்தனுார், பேரிஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் -வடகால் பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.இந்த சாலையோரம் மின் வழித்தடம் செல்லும் மூன்று மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் சாய்ந்து உள்ளன. விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால், மின் விபத்து ஏற்படும் என, அச்சத்தில் வானக ஓட்டிகள் சென்று வருகின்றனர்.எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.