உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு

ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்,:கை ரேகை பதியவில்லையெனில், ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாக ஊவேரி கிராமத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி குறு வட்டம், ஊவேரி ஊராட்சியில் கிராம மக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ.,எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து மனுக்களை பெற்று வந்தனர்.அப்போது, ஊவேரி கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க செல்லும் போது, கை ரேகை விழவில்லை. இதனால், பொருட்கள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டை பெண்கள் முன்வைத்தனர்.கை ரேகை, விழிகள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் சரியாகிவிடும். இன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரி வரவில்லை. கேட்டு விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.அதேபோல, மணியாட்சி கிராமத்தில் கான்கிரீட் சாலை நடுவே மின் கம்பம் உள்ளது. கட்சிக்காரர்கள் கூறியும் இடம் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க., பிரமுகர் ஒருவர் புகார் அளித்தார்.மின் வாரிய அதிகாரிகளிடம் கூறி, மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதையடுத்து, பரந்துார், காரை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை