உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாம்பல் நோய் தாக்கம் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

சாம்பல் நோய் தாக்கம் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டாரத்தில், உளுந்தில் சாம்பல் நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் காளிம்மாள் கூறியதாவது:ரபி பருவத்தில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. உளுந்தில், சாம்பல் நோய் தாக்கம் ஏற்படும். குறிப்பாக, முசரவாக்கம், கிளார், வதியூர், மேல்பங்காரம், ஒழுக்கோல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், உளுந்து சாகுபடியில் சாம்பல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நோய், எரிசப்பே பாலிகோனி என்னும் பூஞ்சாணத்தால் வருகிறது. கடுங்குளிர் காரணமாக ஏற்படும் ஈரப்பதத்தில், உளுந்து செடிகளின் இலைகள் சாம்பல் நிறமாக மாறும். அதன்பின், சுருங்கி உதிர்ந்து விடும். இதை கட்டுப்படுத்துவதற்கு, நோய் தாக்கிய செடிகளை அகற்ற வேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், 10 நாட்கள் இடைவெளியில், 3 சதவீதம் இருமுறை தெளிக்க வேண்டும். அதிலும் கட்டுப்படவில்லை எனில், 200 மில்லி புரோபிகோனசோல் மற்றும் 500 மில்லி அசோக்ஸிஸ்ட்ரோபின் பூச்சிக்கொல்லி மருந்தை, 1 ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். அதன்பின், 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையாக தெளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை