மேலும் செய்திகள்
நல்லுார் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு
15-Oct-2025
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஏரி முழுதும் நிரம்பியுள்ளதால், அதை தொடர்ந்து கண்காணிக்குமாறு, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரிய ஏரிகளுள் ஒன்று உத்திரமேரூர் ஏரி. இந்த ஏரி 20 அடி ஆழமும், 1.1 டி.எம்.சி., கொள்ளளவும் உடையது. உத்திரமேரூர் ஏரியில் 18 மதகுகள், 3 கலங்கல்கள் உள்ளன. பருவ மழை நேரங்களில் ஏரி முழுதுமாக நிரம்பும்போது, 15 கிராமங்களில், 5,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 10 நாட்களாக செய்யாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அனுமந்தண்டலம் தடுப்பணை வாயிலாக, உத்திரமேரூர் ஏரிக்கு நீர் வந்து கொண்டுள்ளது. இதனால், நான்கு நாட்களுக்கு முன், உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி கலங்கல்கள் வழியே உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், உத்திரமேரூர் ஏரியை நேற்று பார்வையிட்டார். அப்போது, ஏரி முழுதுமாக நிரம்பியுள்ளதால் தொடர்ந்து ஏரியை கண்காணிக்குமாறு, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டன், உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா, ஒன்றிய தி.மு.க., - செயலர் ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Oct-2025