உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாக்காளர் பதிவு அலுவலரிடம் அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம்

வாக்காளர் பதிவு அலுவலரிடம் அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை, தி.மு.க., முகவர்கள் கூறியதால், முன்கூட்டியே முடித்ததால், தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம், அ.தி.மு.க., வினர் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூரில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தம் -செயல் திட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் விஜயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தாசில்தார் சுந்தர் முன்னிலை வகித்தார். அதில், உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள, 302 வாக்குச்சாவடிகளுக்கான, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், முகவர்களுக்கான பட்டியலை, தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் விரைவாக அளிக்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, தி.மு.க., முகவர்கள் கூட்டத்தை முடிக்க கூறியதையடுத்து, தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் கூட்டத்தை முடிப்பதாக அறிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., முகவர்கள் ஆளும் கட்சியினரின் பேச்சை கேட்டு, கூட்டத்தை ஏன் முடித்தீர்கள் என, தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர் கோஷங்களை எழுப்பியவாறு அங்கிருந்து வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி