உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாக்காளர் படிவங்கள் குறித்து கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்

வாக்காளர் படிவங்கள் குறித்து கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்

காஞ்சிபுரம்: 'வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் படிவங்களை, தி.மு.க.,வினர் மொத்தமாக பெற்றுக் கொண்டு, வீடு வீடாக வழங்குவதாக', அ.தி.மு.க., மாவட்ட செயலர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் புகார் மனு அளித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம், தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,401 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட, வாக்காளர்கள் திருத்த முகாம், நவ.,4 முதல் டிச.,4 வரை நடைபெறுகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை, 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்கின்ற னர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14.22 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கெடுப்பு படிவத்தை வழங்கி, பூர்த்தி பெறும் பணிகளை செய்கின்றனர். இந்த பணியுடன், அரசியல் கட்சிகளை, ஓட்டுச்சாவடி நிலை முகவர்களும் பங்கேற்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தி.மு.க.,வினரே கணக்கெடுப்பு படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் இருந்து மொத்தமாக பெற்றுக் கொண்டதாக, காஞ்சிபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் மனு அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல இடங்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் இருந்து, தி.மு.க.,வினர், விண்ணப்ப படிவங்களை மொத்தமாக வாங்கி, வாக்காளர்களுக்கு வழங்குகின்றனர். அதேபோல, கிராமப்புறங்களிலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் விண்ணப்பங்களை தி.மு.க.,வினர் பெற்றுக் கொண்டு, வீடு வீடாக அவர்கள் வழங்குகின்றனர். அதுபோல செய்யக்கூடாது. கலெக்டர் கலைச்செல்வியிடம் இதுபற்றி புகார் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை