உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டும் குழியுமான அழகூர் சாலை

குண்டும் குழியுமான அழகூர் சாலை

ஸ்ரீபெரும்புதுார்,:காண்யம் ஊராட்சி, அழகூர் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலையில் செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாகாண்யம் ஊராட்சிக்குட்பட்ட அழகூர் கிராமத்தில், 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், அழகூர் -- மாகாண்யம் சாலையில் சென்று வருகின்றனர்.இந்த நிலையில், 20 ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் மோசமாக நிலையில், குண்டும் குழியுமாக உள்ளது.இதனால், இச்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள்,முதியவர் பெரும் சிரமம் அடைகின்றனர்.அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் சென்று வர முடியாத நிலையில் உள்ளது. 20 ஆண்டுகளாக ஊராட்சி தலைவர்கள் மாறி மாறி வந்தாலும், சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, சாலை அமைக்க விரைந்து நடவடிகை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ