உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகில இந்திய கராத்தே போட்டி காஞ்சி வீரருக்கு வெண்கல பதக்கம்

அகில இந்திய கராத்தே போட்டி காஞ்சி வீரருக்கு வெண்கல பதக்கம்

காஞ்சிபுரம்: ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தில் நடந்த போலீசாருக்கான, அகில இந்திய போலீஸ் ஜூடோ க்ளோஸ்டர் கராத்தே போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கராத்தே வீரரும், போலீசாருமான திலக்குமார், 30, வெண்கலப்பதக்கம் வென்றார். ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 7 - 15 வரை, அகில இந்திய போலீஸ் ஜூடோ க்ளோஸ்டர் கராத்தே போட்டி நடந்தது. இதில், காஞ்சிபுரம் பாரத் சிட்டோரியோ காரத்தே அகாமிடயைச் சேர்ந்த வீரரும், போலீசாருமான திலக்குமார், குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, தமிழ்நாடு காவல் துறைக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீரர் திலக்குமாரை, காஞ்சிபுரம், தலைமை பயிற்சியாளர் கராத்தே பாலா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ