உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காஞ்சி மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது. கடந்த 2003ம் ஆண்டு பத்தாம் வகுப்பிலும், 2005ல் பிளஸ் 2 வகுப்பிலும் பயின்ற 90 மாணவ, மாணவியர், 20 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்டனர். மாணவர்கள் ஓய்வுபெற்ற தங்களுடைய ஆசிரியர்கள் 14 பேரை, நிகழ்ச்சிக்கு வரவைழைத்து கவுரவிக்கப்பட்டனர். பள்ளிக்கு இரண்டு பீரோ வழங்கினர். பழுதான குடிநீர் குழாய்களை சரி செய்து கொடுத்தனர். பள்ளியில் பயின்ற முந்தைய நினைவுகளை பரிமாறி கொண்டனர். ஆசிரியர்கள் பாடம் நடத்தியது குறித்தும், அப்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி