பராமரிப்பு இல்லாத கழிப்பறை பயன்படுத்த முடியாத அவலம்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில், மாநகராட்சி சார்பில், ஏழு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நவீன கழிப்பறை இப்பகுதி மக்களும், இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணியரும் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், 2022ம் ஆண்டு கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. நீர்மூழ்கி மின்மோட்டாரை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நீர்மூழ்கி மின்மோட்டார் பழுது நீக்கம், குழாய் சீரமைத்தல், கட்டடத்திற்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பறை குழாயில் தண்ணீர் வராததால், கழிப்பறை உட்புறத்தில் அசுத்தமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் முறையாக பராமரிக்க பணியாளர்களை நியமிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.