உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடி கட்டடம் வாலாஜாபதில் திறப்பு

அங்கன்வாடி கட்டடம் வாலாஜாபதில் திறப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 14வது வார்டில் நேரு நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.அக்கட்டடம் மிகவும் பழுதானதையடுத்து, புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் ஏற்படுத்த உத்திரமேரூர் சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், 14.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதற்க்கான பணி கடந்த ஆண்டு துவங்கி நிறைவு பெற்றதையடுத்து நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார். வாலாஜாபாத் பேரூர் தலைவர் இல்லாமல்லி, பேரூராட்சி செயலர் மாலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ