மேலும் செய்திகள்
ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேக அலங்காரம்
06-Nov-2025
காஞ்சிபுரம்: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி பவுர்ணமியான நேற்று கிளார் அகத்தீஸ்வரர், களக்காட்டூர் அக்னீஸ்வரர், காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரை வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வரர், எடமச்சி முத்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரையோரம் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் மூலவருக்கு அன்னம், பல வகை கனிகள், காய்கறிகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உத்திரமேரூர் தாலுகா, காக்கநல்லூர் கிராமத்தில், பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல, எடமிச்சி முத்தீஸ்வரர் கோவிலிலும், உத்திரமேரூர் கைலாசநாதர், இரட்டைதாலீஸ்வரர் கோவில்களிலும், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது.
06-Nov-2025