வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஓரிக்கை, கோல்டன் நகரைச் சேர்ந்தவர் நவீன், 25. இவர், மிலிட்டரி ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் காய்கறி வாங்க இருசக்கர வாகனத்தில், ஓரிக்கை பஸ் டிப்போ அருகே சென்றார்.அங்கு அவரை மடக்கிய இருவர், கத்தியை காட்டி மிரட்டி, 2,100 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில், நவீன் புகார் அளித்தார்.இது தொடர்பாக, ஓரிக்கை மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த முருகானந்தம், 24; செவிலிமேடு அவ்வையார் நகரைச் சேர்ந்த மணி பாரதி, 23, ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 2ம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய செவிலிமேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பூச்சி என்கிற ஜனாகுமார்,20, தலைமறைவாக இருந்தார். அவரை காஞ்சி தாலுகா போலீசார், நேற்று கைது செய்தனர்.