களிமண் நிலத்திலும் ஆப்பிள் சாகுபடி
க ளிமண் நிலத்தில், ஆப்பிள் சாகுபடி குறித்து , காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வே.பரசுராமன் கூறியதாவது: விவசாய நி லம் 30 சென்ட் தேர்வு செய்து, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு, மண் கொட்டி, நிலத்தை உயரப்படுத்தியுள்ளேன். இந்த நிலத்தில், காய்கறி செடிகள் மற்றும் மா, தென்னை, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழ மரங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், குளிர் பிரதேசங்களில் விளையும், ஆப்பிள் சாகுபடி செய்துள்ளேன். நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு நன்றாக வளர்கின்றன. இன்னும் மகசூல் எடுக்கவில்லை. ஏற்கனவே ஆப்பிள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, நல்ல மகசூல் கிடைத்துள்ளது. மேலும், ஆப்பிளின் தோல் கடினமாக இருக்கிறது என, கூறுகின்றனர். மகசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - வே.பரசுராமன், 99521 23682.