உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிராம உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கிராம உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணிக்கான காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 வருவாய் வட்டங்களிலும் 109 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் 34; ஸ்ரீபெரும்புதுார் 8; உத்திரமேரூர் 31; வாலாஜாபாத் 19; குன்றத்துார் 17, என காலி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து, வரும் ஆகஸ்ட், 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.வருவாய்த் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://kanchee puram.nic.inஇணையதளத்தில் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.காலி பணியிடங்கள் குறித்த விபரம் அந்தந்த தாலுகா அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு படித்தவராகவும், 21 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகையாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள், 21 வயது நிரம்பி 42 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருத்தல் அவசியம்.தகுதி உடையோர் விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !