உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் , தேசிய போதை பொருள் குறைப்பு செயல்திட்டத்தின்கீழ் நஷா முக்த் பாரத் அபியான் 2.0 என்ற திட்டம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், 10 லட்சம் ரூபாய் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும்.இத்திட்டத்தில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அதிகளவில் விழிப்புணர்வு வழங்க வேண்டும்.போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை இலக்காக கொண்டு அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.மேலும், பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து ஜூன் 7ம் தேதிக்குள் செயல் திட்டங்களை கொண்ட கருத்துருவை, காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை