உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தொழில் முனைவோர் திட்டத்திற்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

 தொழில் முனைவோர் திட்டத்திற்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்: 'மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தில், புதிதாக தொழில் துவங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனுதவியும், 25 சதவீதம் மானியமும் வழங்குவதோடு, உரிய பயிற்சியும் வழங்கப்படும். தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் தகுதியானவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 55 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவோர் மேம் பாட்டுத் திட்டத்தில் மட்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் இருந்து பொருட்கள் தயாரிக்கும் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும். மேலும், காகித கழிவு களிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஓவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டுநுால் அணிகலன் தயாரிப்பு மற்றும் பிற தகுதியான தொழில் களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள், உரிய ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.inஎன்ற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ