உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாவட்ட வள பயிற்றுனர் நியமனம்

மாவட்ட வள பயிற்றுனர் நியமனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், சமூக தணிக்கை பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்து, சமூக தணிக்கை குறைபாடுகளை பதிவு செய்வர்.இந்த பிரிவுக்கு, மாவட்ட வள பயிற்றுனர் பணியிடம் காலியாக இருந்தது.இந்த பணியிடத்திற்கு, சங்கர் என்பவர் மாவட்ட வள பயிற்றுனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, ரமணஜோதி என்பவரை மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை பிரிவு சங்கம் நியமித்துள்ளது. அவர், சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ