காஞ்சி கல்லுாரியில் தொல்பொருள் கண்காட்சி
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி கலையரங்கில் இலக்கிய மன்ற விழா, தொல்பொருட்கள், பழங்கால நாணயங்கள் கண்காட்சி, தொல்லியல் பயிலரங்கம் என, முப்பெரும் விழா நேற்று நடந்தது.கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில் நடந்த இவ்விழாவிற்கு கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் நஜ்மா, வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிப் பேராசிரியை ராணி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல், தொல் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் உமாசங்கர், தொல்லியல் ஆய்வாளர் ரா.சு.ஜவஹர்பாபு ஆகியோர் தொல்லியல் ஆய்வுகள் குறித்து பேசினர்.